Friday, July 23, 2010

03. உம்மை அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை

உம்மை அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை


உம்மை அப்பான்னு கூப்பிடவா?

உம்மை அம்மான்னு கூப்பிடத்தான் ஆசை

உம்மை அம்மான்னு கூப்பிடவா?

அப்பான்னு கூப்பிடுவேன் உம்மை

அம்மான்னு கூப்பிடுவேன்


1.கருவில் என்னை சுமந்ததப் பார்த்தா

அம்மான்னு சொல்லணும்

தோளில் என்னை சுமந்ததப் பார்த்தா

அப்பான்னு சொல்லணும்

என்னைக் கெஞ்சுவதும் கொஞ்சுவதும்

பார்த்தா அம்மான்னு சொல்லணும்

என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா

அப்பான்னு சொல்லணும்


2.கண்ணீரை துடைச்சதைப் பார்த்தா

அம்மான்னு சொல்லணும்

விண்ணப்பத்தைக் கேட்பதைப் பார்த்தா

உம்மை அப்பான்னு சொல்லணும்

என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா

உம்மை அம்மான்னு சொல்லணும்

உங்க இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா

உம்மை அப்பான்னு சொல்லணும்

02. அநாதி சிநேகத்தால் என்னை

அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரையா

காருண்யத்தினால் என்னை இழுத்துக்கொண்டீரே

உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது
உங்க தயவு பெரியது

1.அனாதையாய் அலைந்த என்னை தேடி வந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து காத்து கொண்டீரே

2.தாயின் கருவில் தோன்று முன்னே தெரிந்து கொண்டீரே
தாயை போல ஆற்றி தேற்றி அரவணைத்தீரே

3.நடத்தி வந்த பாதைகளை நினைக்கும் போதெல்லாம்
கண்ணீரோடு நன்றி சொல்லி துதிக்கிறேன் ஐயா

4.கர்த்தர் செய்ய நினைத்தது தடைபடவில்லை
சகலத்தையும் நன்மையாக செய்து முடித்தீரே

01. அப்பா உம் கிருபைகளால்

அப்பா உம் கிருபைகளால் - என்னை

காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால் - என்னை
அணைத்துக் கொண்டீரே

1.தாங்கி நடத்தும் கிருபையிது
தாழ்வில் நினைத்த கிருபையிது - 2
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
தயவாய் காக்கும் கிருபையிது - 2

2.வியாதியின் நேரத்தில் காத்த கிருபை
விடுதலை கொடுத்த தேவ கிருபை - 2
சூழ்நிலைகள் மாறினாலும்
மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை - 2

3.கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
கண்ணீரை மாற்றின தேவ கிருபை - 2
தடைகள் யாவையும் உடைத்து எறிந்து
வெற்றியை தந்திட்ட தேவ கிருபை - 2